September 17, 2020
தண்டோரா குழு
கோவையில் கோவை நாளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில், பரிசோதனை முடிவுகளை 12 மணி நேரத்துக்குள் வெளியிட வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
கோவையில் #COVID19 பாதிப்பை தடுக்கும் நோக்கில், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் தனியார் ஆய்வகங்கள், பரிசோதனை முடிவுகளை 12 மணி நேரத்துக்குள் வெளியிட வேண்டும்.இதில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டால் அவர்கள் மருத்துவமனைக்கு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்.மேலும், உடனடியாக நோய் பாதிக்கப்பட்டோரின் தொடர்பு விவரங்களை சுகாதாரத் துறை & கோவை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும்.இதற்கு தனியார் பரிசோதனை ஆய்வகங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.