June 27, 2020
தண்டோரா குழு
கொரனா வைரஸை கண்டறிய பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ளும் ரோபோட்டிக் கருவியை கோவையை சேர்ந்த இளைஞர் உருவாக்கியுள்ளார்.
கோவையை சேர்ந்த கார்த்திக் வேலாயுதம் என்ற இளைஞர் பட்டய படிப்பு முடித்துள்ளார். இவர் தற்போது இந்த கொரோனா காலத்திற்கு மிக அவசியமான ரோபோட்டிக் ஒன்றினை கண்டுபிடித்துள்ளார். இந்த ரோபோட்டிக் கருவி பிசிஆர் பரிசோதனையின் சளி மாதிரி சேகரிப்புக்கு உதவுகிறது.ரோபோட்டிக் நேரடியாக பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் மருத்துவர் மற்றும் செவிலியர்களை தொற்று இல்லாமல் காப்பாற்றுவதற்கு உதவுவதுடன் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு இது பயனுள்ளதாகவும் இருக்கிறது.
இது குறித்து அவர் கூறுகையில்
இந்த ரோபோ ஒருவர்க்கு பரிசோதனை மேற்கொண்ட பின்பு ஒவ்வொரு முறையும் சானிடைசர் திரவத்தையும் கொண்டு சுத்தம் செய்கிறது.இக்கருவியினை தயாரிப்பதற்கு மூன்று நாட்களாகிறது. இதனுடைய தற்போதைய விலை சுமார் 2000 வரை ஆகிறது. அரசு அனுமதித்தால் மருத்துவமனைகளுக்கு தயாரித்து வழங்கி விடுவோம். இது போன்ற பயனுள்ள கருவிகளை மேலும் கண்டு பிடிப்பதற்கு முயற்சி எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். இதுபோன்ற கண்டுபிடிப்புக்கு அரசு ஊக்குவித்தால் மேலும் பல கருவிகளை கண்டுபிடிப்பதற்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.