June 26, 2020
தண்டோரா குழு
கோவை எம்.ஜி.ஆர் மார்க்கெட்டை சேர்ந்த 3 வியாபாரிகளுக்கும், அண்ணா மார்க்கெட்டை சேர்ந்த ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் எம்.ஜி.ஆர் மார்க்கெட் மூடப்படும் என கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார். இதையடுத்து,
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் எம்.ஜி.ஆர் மார்க்கெட்டிற்கு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.
மேலும்,மார்க்கெட்டிற்கு அருகே உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா என்ற தனியார் வாகன நிறுத்துமிடத்திற்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.காய்கறிகளை எடுத்து செல்வதற்காக வியாபாரிகளுக்கு நாளை மதியம் 12 மணி வரை கெடு அளிக்கப்பட்டுள்ளது.வியாபாரிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும் எனவும், அதில் கொரோனா நெகட்டிவ் வரும் வியாபாரிகளுக்கு வியாபாரம் நடத்த மாற்று இடம் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், எருக்கம்பெனி மற்றும் ஜி.சி.டி கல்லூரி வளாகத்தில் தற்காலிக மார்க்கெட் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.அங்கு வியாபாரிகளுக்குக் கடைகள் வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.