• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனா பரவலை தடுக்க முதலில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் – டாக்டர் கிருஷ்ணசாமி

April 15, 2021 தண்டோரா குழு

கொரோனா பரவலை தடுக்க முதலில் டாஸ்மாக்,கடைகளை உடனடியாக மூட வேண்டும்,என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோவையில் தெரிவித்துள்ளார்.

கோவையில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,

கொரோனோ பெருந்தொற்று வேகமாக பரவுவது மிகவும் வேதனையளிக்கிறது. வணிக நிறுவனங்கள்,தொழிற்கூடங்கள் முழு ஊரடங்கை தாங்க முடியாது,எனவே அப்படி ஒரு எண்ணமே வரக்கூடாது.மத்திய, மாநில அரசுகள் துரிதமாக செயல் பட வேண்டும் எனவும்,கொரோனோ அறிகுறிகள் தென்பட்டாலே உடனே சிகிச்சை தொடங்க வேண்டும் கூறிய அவர்,முதலில் டாஸ்மாக்,கடைகளை உடனடியாக மூட வேண்டும் எனவும்,அரசு இதில் அலட்சியம் காண்பிக்காமல் செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர்,முகக்கவசம் அணியவில்லை என்றால் முகக்கவசம் கொடுக்க வேண்டும், அபராதம் விதிக்க கூடாது.மாநில, மாவட்ட அளவில் அரசியல் கட்சி தலைவர்களை வைத்து குழு அமைத்து கொரோனோ கட்டுப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க