• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொரோனா நிவாரண பணிகளுக்காக நடிகர் விஜய் ரூ.1.30கோடி நிதியுதவி

April 22, 2020 தண்டோரா குழு

கொரோனா நிவாரண பணிகளுக்காக நடிகர் விஜய் ரூ.1.30கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியா முழுவதுமே அத்தியாவசியப் பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணியும் நடக்கவில்லை. படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத காரணத்தால்,சினிமாவை நம்பியுள்ள தொழிலாளர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுக்கு பல்வேறு திரையுலகினர் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார்கள். மேலும், பி.எம் கேர்ஸ் நிதி, முதல்வர் நிவாரண நிதி ஆகியவற்றுக்கும் தொழிலதிபர்களும்,
திரையுலகப்பிரபலங்களும்நிதியுதவி அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில், கொரோனா நிவாரண பணிகளுக்காக நடிகர் விஜய் ரூ.1.30கோடி நிதியுதவி அளித்துள்ளார்.இதில் பி.எம் கேர்ஸ் நிதிக்கு 25 லட்ச ரூபாய், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு 10 லட்ச ரூபாய், பெப்சிக்கு 25 லட்ச ரூபாய், கர்நாடகா முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய், ஆந்திர முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய், தெலங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய், பாண்டிச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய் என அறிவித்துள்ளார் விஜய்.

இதுபோக மேலும், ஒரு தொகையை தனது நற்பணி மன்றங்களுக்கு அனுப்பிவைத்து அதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகவும் உதவிகள் செய்ய முடிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க