September 30, 2020
தண்டோரா குழு
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து மீண்டும் கோவை எஸ்.பி. அருள் அரசு மீண்டும்
பணிக்கு திரும்பினார்.
கோவை மாவட்ட எஸ்.பி. அர.அருளரசு.,
15 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு, சிகிச்சைகள் மேற்கொண்டார்.
இந்நிலையில்,இன்று கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்த அவர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்தார்.
இதையடுத்து,அவருக்கு கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் நரேந்திரன் நாயர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். அதேபோல கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அனிதா,விஜய கார்த்திக்ராஜ்,தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் லோகநாதன் மற்றும் காவலர்கள் ஆகியோர்கள் வரவேற்றனர்.இதனை தொடர்ந்து
பணியில் அமர்ந்த அவர் வழக்கமான பணிகளை மேற்கொண்டார்.