July 23, 2020
தண்டோரா குழு
தலைக்கவசம் உயிர் கவசம் என்பது போல் இன்றைக்கு முககவசம் உயிர் கவசம் என்று சொல்லும் நிலை வந்து விட்டது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள நமக்கு முக கவசம் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. நம் அன்றாட வாழ்க்கையில் முகக்கவசம் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. உலக சந்தையில் அதன் தேவை அதிகரித்துள்ளது. ஒருமுறை பயன்படுத்தும் முகக்கவசம், பலமுறை பயன்படுத்தும் முகக்கவசம் என பலவகையான முகக்கவசங்கள் சந்தையில் களமிறக்கப்பட்டுள்ளன.
ஆனால்,இந்த முகக்கவசங்கள் எந்த அளவிற்கு பாதுகாப்பை உறுதிசெய்கின்றன, நாம் அணியும் முகக்கவசங்கள் குறித்து நமக்கு எவ்வளவு தெரியும் போன்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.முகக்கவசங்களின் உருவாக்கம், அவை உருவாக்கப்படுவதற்கான நோக்கம் ஆகியவை குறித்து நாம் தேடாவிட்டால் இதுபோன்று எழும் கேள்விகளுக்கு பதில் கிடைப்பது மிகவும் கடினம்.ஆம், சாதாரணமான துணியாலான முகக்கவசங்கள் நம்மை வைரஸ் தொற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆகவே,வைரஸ்களை முழுவதுமாக பில்டர் செய்யும் முகக்கவசங்கள் மட்டுமே தற்போதைய தேவையாக இருக்கிறது. 98.26 விழுக்காடு வைரஸ்களை பில்டர் செய்யும்
‘மெடிக் விரோஸ்டட் ’என்ற பெயரிடப்பட்ட முகக்கவசத்தை கோவையைச் சேர்ந்த சிவா டெக்ஸியார்ன் எனும் ஆடை வடிவமைப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.சுவிட்லாந்து நாட்டின் தொழில்நுட்பத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த முகக்கவசமானது, வைரஸ்கள், பாக்டீரியாக்கள் எதிராக நம்மைப் பாதுகாக்கும் என்று அதனை வடிவமைத்தவர்கள் கூறுகிறார்கள்.இதற்கு யூரோபின்ஸ் அறிவியல் நிறுவனத்தின் தரச்சான்றிதழ் கிடைத்துள்ளதையடுத்து, அனுரா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்யவுள்ளது.
”மூன்று அடுக்கு பாதுகாப்புடன் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த முகக்கவசம் கரோனா உள்பட எந்தவொரு வைரசையும், 2 முதல் 3 நிமிடங்களுக்குள் அழிக்கும் திறன் கொண்டது. மார்க்கெட்டில் 49 ரூபாய்க்கு அறிமுகமாகவிருக்கும் இந்த முகக்கவசத்தை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணியலாம். ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகு சுத்தம் செய்து,15 முறை ஒரே முகக்கவசத்தை உபயோகிக்கலாம். இதனால் சுவாசப்பதிலும் பிரச்னை ஏற்படாது” என்று கூறுகிறது சிவா டெக்ஸ்யார்ன் நிறுவனம்.
மெடிக் வைரஸ்டெட் முகக்கவசத்தின் உருவாக்கம் மற்றும் அதன் செயல்பாடு:
மொத்தம் மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த முகக்கவசத்தின்,வெளிப்புற அடுக்கில் நுண்ணியிரிகளைக் கொல்லும் திறன் கொண்ட ரசாயனம் பூசப்பட்டிருக்கும். இந்த ரசாயனம் வைரஸ் முகக்கவசத்தில் ஒட்டிய மூன்று நிமிடங்களுக்குள் அதனை அழித்துவிடும். நடுவிலுள்ள அடுக்கு,வெளிப்புற அடுக்கில் பூசப்பட்டிருக்கும் ரசாயனத்திலிருந்து முகக்கவசம் அணிவரைப் பாதுகாக்கும். ஏனேனில், அந்த ரசாயனம் மனிதர்களையும் பாதிக்கும் தன்மை கொண்டது.முகத்துடன் நேரடி தொடர்புகொண்ட உள்புற அடுக்கு, 100 விழுக்காடு பருத்தியால் உருவாக்கப்பட்டிருக்கும். இது சுவாசப்பதில் இருக்கும் சிரமங்களைப் போக்கும்.
சிவா டெக்ஸ்யார்ன் நிறுவனம் தற்போது 1 லட்சம் முகக்கவசங்களைத் தயாரித்து, தமிழ்நாடு முழுவதும் விநியோகிக்க முடிவு செய்துள்ளது. நமது அண்டை மாநிலங்களிலிருந்தும் இந்த முகக்கவசங்கள் குறித்து விசாரிப்பதாக, முகக்கவசங்களை விநியோக்கிக்கும் அனுரா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் செந்தில்குமார் கூறுகிறார்.
முதல்கட்டமாக கரோனாவுக்கு எதிரான போரில் முன்கள வீரர்களாகப் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினர், மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு இலவசமாக இந்த முகக்கவசங்களை வழங்கவிருப்பதாகக் கூறும் செந்தில்குமார்,இந்த முகக்கவசங்கள் சமுதாய நலனுக்காக தயாரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறார்.மேலும்,இந்த வகை முகக்கவசம் விலை மலிவாக இருப்பதோடு, பாதுகாப்பையும் உறுதிசெய்வதால் சாதாரண மக்களும் இதனை வாங்கி பயன்பெறலாம் என்றும் அவர் கூறுகிறார்.
*தொடர்புக்கு*
*7904608402 / 9790012697*
*[email protected]*