August 10, 2020
தண்டோரா குழு
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி சிகிச்சைக்கு பின் பூரண குணமடைந்து பணிக்கு திரும்பினார்.
கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசமணிக்கு கடந்த ஜூலை 15 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் சிட்ரா அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய மாவட்ட ஆட்சியர் ராசாமணி வீட்டில் தன்னை தனிமைபடுத்திக்கொண்டார். இந்நிலையில் 26 நாட்களுக்கு பின் மீண்டும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தன் பணியை துவங்கினார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் மாவட்ட வருவாய் அலுவலர், ஊரக வளர்ச்சி துறையில் திட்ட இயக்குனர் மற்றும் உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.