• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனா காலத்தில் சிறை கைதிகளுக்கு யோகா கற்றுக்கொடுக்கும் ஈஷா!

August 11, 2020 தண்டோரா குழு

கொரோனா பாதிப்பு மிகுந்த இந்த சூழலில் சிறை கைதிகளின் உடல் மற்றும் மனநலனை மேம்படுத்தும் விதமாக ஈஷா யோகா மையம் ஆன்லைன் முறையில் அவர்களுக்கு பிரத்யேக யோகா வகுப்புகளை நடத்தி வருகிறது.

தமிழக சிறைத் துறை உயர் அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று, சென்னை, வேலூர், கடலூர், திருச்சி, சேலம், மதுரை, பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் இருக்கும் அனைத்து மத்திய சிறைச்சாலைகளிலும் இலவச ஆன்லைன் யோகா வகுப்புகள் ஜூலை 28-ம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.

சத்குருவால் பயிற்றுவிக்கப்பட்ட ஈஷா யோகா ஆசிரியர்கள் இவ்வகுப்புகளை ஒருங்கிணைத்து நடத்துகின்றனர். இதில் யோக நமஸ்காரம், சிம்ம க்ரியா, ஈஷா க்ரியா போன்ற யோக பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. சிம்ம க்ரியா பயிற்சியானது நோய் எதிர்ப்பு சக்தியையும் நுரையீரல் திறனையும் மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். ஈஷா க்ரியா பயிற்சி உடலளவிலும், மனதளவிலும் அமைதியாகவும், சமநிலையாகவும் இருப்பதற்கும் துணை புரிகிறது. மேலும், மன அழுத்தத்தை குறைப்பதற்கும் இப்பயிற்சிகள் தீர்வாக இருக்கும்.கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, சமூக இடைவெளியுடன் தனித் தனிக் குழுக்களாக இவ்வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதன்மூலம், தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஆண் மற்றும் பெண் கைதிகள் பயன்பெற்று வருகின்றனர். அத்துடன் சிறை வார்டன்கள் மற்றும் பணியாளர்களும் இவ்வகுப்பில் பங்கேற்று பயன் பெறுகின்றனர்.

ஈஷா யோகா மையமானது கடந்த 28 ஆண்டுகளாக தமிழக சிறைச்சாலைகளில் இலவச யோகா வகுப்புகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க