April 28, 2020
தண்டோரா குழு
கொரோனா இல்லாத மாவட்டமாக ஈரோடு உருவெடுத்தது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிகபட்சமாக சென்னையில் இதுவரை 570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதற்கிடையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஈரோட்டில் 70 பேர் கொரோனாவால்
பாதிக்கப்பட்டிருந்தனர்.அதில்,65 பேர் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், ஒருவர் உயிரிழந்தார்.சிகிச்சையில் இருந்த மீதமுள்ள 4 பேரும் இன்று (ஏப்.,28) மாலை டிஸ்சார்ஜ் ஆகினர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து முழுவதுமாக மீண்ட மாவட்டமாக ஈரோடு மாறியுள்ளது.
அதைப்போல், ஈரோட்டில் தடுப்பு நடவடிக்கையாக 33,330 குடும்பங்களைச் சேர்ந்த 1,66,806 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.ஆனால் , அவர்களுக்கு கொரோனா இல்லை என்று கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்கப்பட்டனர். தற்போது முழுவதுமாக மீண்ட மாவட்டமாக ஈரோடு மாறியுள்ளது.