July 10, 2020
தண்டோரா குழு
கோவையில் எஸ் டி பி ஐ கட்சியின் சார்பாக கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை மாவட்ட எஸ் டி பி ஐ கட்சியின் சார்பாக கொரோனா இல்லாத கோவை அதுவே நமக்கு தேவை என்ற விழிப்புணர்வு வலியுறுத்தி இருசக்கர வாகனத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டனர். மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் கட்சியின் சார்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர நீர், முகக் கவசம் அணியாதவர்களுக்கு இலவச முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் ராஜா உசேன் தலைமையில் கோவை மாநகரம் முழுவதும் பொதுமக்களுக்கு
எஸ் டி பி ஐ கட்சியினுடைய நிர்வாகிகளும் செயல் வீரர்களும் கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசமும் வழங்கினார்கள்.