September 12, 2020
தண்டோரா குழு
கோவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மொத்த பாதிப்பு 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில், கொரோனா இல்லா மாநகராக கோவையை உருவாக்க தன்னார்வலர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பக்கத்தில்,
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் #COVID19 தொற்றை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகத்துடன் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு ‘பொதுநலம் பேணு’ எனும் உயர்ந்த பண்போடு செயல்பட்டு வரும் தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்களுக்கு முதற்கண் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
கோவை மாநகரை #COVID19 நோய்த்தொற்று இல்லா மாநகராக மாற்றும் முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள விருப்பமுள்ள தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் 96269 01753, 77085 92333 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு கொரோனாவுக்கு எதிரான கோவை மாநகராட்சியின் நடவடிக்கைகளில் பங்கேற்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.