• Download mobile app
29 Mar 2026, SundayEdition - 3700
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம்: உயர்நீதிமன்றம்!

April 26, 2021 தண்டோரா குழு

கொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிகபட்சமாக 77 வேட்பாளர்கள் போட்டியிட்ட கரூர் சட்டமன்றத் தொகுதியில், வாக்கு எண்ணிக்கையின்போது கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றக் கோரி கரூர் சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி அமர்வு முன்பு இன்று (26/04/2021) விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “வாக்குப்பதிவின்போது கரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின்போதும் கரூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படும்” எனத் தெரிவித்தார்.

இதற்கு தலைமை நீதிபதி அமர்வு, “
கொரோனா 2வது அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம்: அரசியல் கட்சிகளும் இஷ்டம் போல பிரச்சாரம் செய்ததே கொரோனா பரவலுக்கான காரணம். கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளுக்குத் தேர்தல் ஆணையத்தின் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக இல்லையென்றால் வாக்கு எண்ணிக்கைக்கு தடைவிதிக்க நேரிடும் எனக் கூறியுள்ளது.

மேலும் படிக்க