May 21, 2020
தண்டோரா குழு
ஆட்டோ இயக்க அனுமதி கொடுங்க என ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழலில், பல்வேறு தொழில்களுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றது.ஆனால்,ஆட்டோ,டாக்ஸிகள் இயக்க இன்னும் அனுமதி வழங்கப் படவில்லை. 55 நாட்களாக தொழிலை செய்ய முடியாததால் ஆட்டோ ஓட்டுனர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்டோ தொழிற்சங்கங்கள் மற்றும் ஓட்டுனர்கள் கூறுகையில்,
அவசர நிலைக்கு ஆட்டோவை எடுத்து கொண்டு வரும் போது காவல் துறை புகைப்படமாக எடுத்து அபாராதம் போட்டு விடுகின்றனர். அந்த அபராதத் தொகை 200 ரூபாயிலிருந்து 700 ரூபாய் வரைக்கும் வரும் அதை நாங்கள் எவ்வாறு கட்ட இயலும் என்று கவலை தெரிவிக்கின்றனர்.
பொதுவாகவே ஆட்டோ வாகனங்கள் மாதத்தவணை மூலமாக தனியார் வங்கிகள் மற்றும் தனியார் பைனான்ஸ்களில் தவணைகளை கட்டி வருகின்றோம். இந்நிலையில் ஆட்டோக்களின வாகனத்தின் மீத உள்ள கடன்.இன்சுரன்ஸ் வேறு உள்ளது. ஆட்டோக்கள் ஓடாத சூழ்நிலையில் தனியார் வங்கி மற்றும் பைனான்ஸிலிருந்து கடனை கட்ட சொல்லி மிரட்டுவதால் வரக்கூடிய மாதம் என்ன செய்யப்போகிறோம் என்ற பயம் ஏற்படுகிறது என தெரிவிக்கின்றனர்.
மேலும் கொரோனாவை விட கடன் எங்கள் உயிரை எடுக்கிறது.நாங்கள் குடும்பத்தை மொத்தமாக சுமக்கும் சூழலில் தான் இந்த ஆட்டோ தொழிலுக்கு வந்தோம்.வறுமையை சமாளிக்க ஆட்டோ ஓட்டி வந்த சூழலில், தற்போது தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.உடனடியாக ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்றும் ஆட்டோக்களின் கடந்த 2 மாத வங்கிகள் மற்றும் பைனான்ஸ்களின் கட்டப்படும் மாதத்தவணையின் வட்டியை தொகையை தற்போது உள்ள சூழ்நிலையில் எங்களால் கட்ட இயலாது எனவே அவ்_வட்டி தொகையை தள்ளுபடி செய்ய அரசு உதவிட வேண்டும் என ஆட்டோ ஓட்டுனர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.ஆட்டோக்களை இயக்க அனுமதி வழங்கக்கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் பல கட்ட மனுக்களை அளித்தும் வழி கிடைக்காமால் தற்போது வரை தவித்து வருவது குறிப்பிடத்தக்கது