• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனாவால் உயிரிழந்தவரின் உடல் தமுமுக சார்பில் முழு பாதுகாப்புடன் கோவையில் நல்லடக்கம்

July 3, 2020 தண்டோரா குழு

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரானா தொற்றால் உயிரிழந்தவரின் உடல் தமுமுக சார்பில் முழு பாதுகாப்புடன் கோவையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஊட்டியை சேர்ந்த முதியவர் 63 வயது ஒருவர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்நிலையில்,அவரது உடல் கோவையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அமைப்பின் சார்பாக முழு பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கொரானா என்றாலே பயத்தில் இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் ஒருவர் கொரானா நோயால் இறந்துவிட்டார் என்றாலே அக்கம்பக்கம் சொந்த பந்தம் யாரும் வர மறுக்கும் பட்சத்தில் மனித நேயத்தோடு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் உடனிருந்து உரிய மரியாதை செய்து நல்லடக்கம் செய்தார்கள். இதுவரை தமிழகம் முழுவதும் 186 க்கும் மேற்பட்ட கொரானா நோயால் இறந்தவர்களை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக அடக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க