July 24, 2020
தண்டோரா குழு
கொரொனா விவகாரத்தில் அரசின் அறிவிப்பு வெளிப்படையாக இல்லை என கொ.ம.தே. க தலைவர் பொதுசெயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுசெயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்
கொரொனா தொற்று பரவல் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபட்டாலும் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது. கொரொனா விவகாரத்தில் அரசின் அறிவிப்பு வெளிப்படையாக இல்லை என குற்றம்சாட்டினார். தூய்மை பணியில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதை உணர முடிகிறது , நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஓப்பந்த தூய்மை பணியாளர்களாக 190 பேர் பணியில் உள்ளதாக பதிவேட்டில் இருக்கின்றது ,ஆனால் ஆய்வு செய்தபோது 45 பேர் மட்டுமே பணியில் ஈடுபட்டிருப்பது தெரியவருவகிறது.இதிலிருந்து பார்க்கும் போது தூய்மை பணி நடக்கவில்லை என்பது தெரிய வருவகிறது. சரியாக தூய்மை பணி நடக்காதது தான் நோய் தொற்று அதிகமாக காரணமாக இருக்கின்றது.
மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் ஒப்பந்த தொழிலாளர்கள் இருப்பதாக சொல்லப்படுகின்றது.ஆனால் திருச்செங்கோட்டை போல மாநிலம் முழுவதும் கணக்கெடுத்தால் தூய்மை பணியாளர்களில் பெரிய அளவு முறைகேடு நடந்திருக்கும். எனவே உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி இதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.தூய்மை பணிக்காக தமிழகத்தில் ஒரு நாளைக்கு 5 கோடி செலவாகின்றது.ஆனால் ஒரு கோடிக்கு தான் பணி நடக்கிறது.நான்கு கோடிக்கு நடப்பதில்லை.ஒரு நாளைக்கு நான்கு கோடி என்றால் மிகப்பெரிய முறைகேடு நடந்து மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளோம்.
தமிழகம் முழுவதும் கணக்கிட்டால் அதிக இழப்பாக இருக்கும்.உள்ளாட்சி துறையில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் எவ்வளவு முறைகேடு நடந்திருக்க வேண்டும்.இது ஒரு மெகா மஸ்டர் ரோல் ஊழல் நடந்துள்ளது. தூய்மைப்பணியிலேயே இவ்வளவு ஊழல் என்றால் மற்ற துறைகளில் எவ்வளவு நடந்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், மருத்துவ படிப்புகளில்
ஓ பி சி இட ஒதுக்கீட்டை கொடுக்க கூடாது என்பது தான் மத்திய அரசின் நோக்கம் எனவும் , இட ஒதுக்கீட்டை கொடுக்க கூடாது என்று இருப்பதால் தான் நீதிமன்றத்தை மத்திய அரசு சாட்சிக்கு இழுக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.தமிழகத்தில் இடைத்தேர்தல் நடப்பதற்கான வாய்ப்பில்லை என கருதுகிறேன் என கூறிய அவர், வேளாளர் என்ற பெயரை பயன்படுத்துவதில் சாதி பிரச்சினைகளை உருவாக்கி அரசியல் லாபம் அடைய பார்க்கிறார்கள் எனவும், இந்த விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் பிரச்சினை ஏற்படுத்தும் நோக்கில் அறிக்கை வெளியிடுவதை கண்டிக்கிறேன் எனவும் தெரிவித்தார்.எஸ்.சி, பி.சி, எம்.பி.சி, எப்.சி என்று சொல்வதற்கு பதில் அந்த பிரிவுகளுக்கு எண்களை கொடுக்கலாம் எனவும் எஸ்.சி பிரிவிற்கு ஒன்றாவது எண்ணை கொடுத்தாலும் தவறில்லை என தெரிவித்தார். திருச்செங்கோடு தூய்மை பணியாளர் விவகாரத்தை ஆதாரத்துடன் வைத்துள்ளோம் எனவும், ஒப்பந்த பணியாளர்களுக்கு பயோ மெட்ரிக் முறையினை கொண்டு வந்தாலே பாதி முறைகேடுகள் வெளியாகிவிடும் எனவும் தெரிவித்தார். திருச்செங்கோடு அதிமுக சட்டமன்ற உறுப்பினரின் ஓட்டுநர் ஒப்பந்த பணியாளராக உள்ளார் எனவும், சட்ட மன்ற உறுப்பினருடன் இருக்கும் இரு பெண் கட்சி நிர்வாகிகளின் பெயர் ஒப்பந்த பணியாளர் பட்டியலில் இருக்கின்றது எனவும், அவர்களுக்கு தினமும் சம்பளமாக 500 ரூபாய் போகின்றது எனவும் தெரிவித்தார்.கந்தசஷ்டி கவசம் கொச்சை படுத்திய விவகாரத்தில் முதலில் கண்டனத்தை பதிவு செய்ததாக கூறிய ஈஸ்வரன், மற்ற மத்தினர் மனம் புண்படும் விதத்தில் யாரும் செயல்பட கூடாது எனவும் தெரிவித்தார்.