• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரொனாவில் இருந்து குணம் அடைவதாக மூலிகை மைசூர்பா விற்பனை செய்த கடைக்கு சீல் – கடையின் உரிமம் ரத்து

July 8, 2020 தண்டோரா குழு

கோவையில் ஒரே நாளில் கொரொனாவில் இருந்து குணம் அடைவதாக மூலிகை மைசூர்பா விற்பனை செய்த கடைக்கு சீல் – கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் இயங்கி வரக்கூடிய நெல்லை லாலா ஸ்வீட் கடையின் உரிமையாளர் மூலிகை மைசூர்பா எனும் 19 மூலிகைகள் பயன்படுத்தி தயாரித்து வருவதாக தெரிவித்தார். மேலும் இந்த மைசூர்பா சாப்புட்டு வருபர்களுக்கு கொரோனா நோய் ஒரே நாளில் குணமாகும் எனவும் கடந்த 3 மாதமாக விற்பனை செய்து வருவதாக கூறினார். மேலும் அவர் வசிக்கக்கூடிய பகுதிகளுக்கு அருகே சின்னியம்பாளையம், ஆர் ஜி புதூர், வெள்ளலூர் ஆகிய பகுதிகளில் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக மூலிகை மைசூர்பாக் அளித்ததாகவும் கூறினார். அதன் மூலம் அவர்கள் ஓரிரு நாட்களில் நோய் தொற்றிலிருந்து குணமாகி வந்ததாகவும் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

தன்னுடைய தாத்தா சித்த மருத்துவத்தில் கற்றுக் கொடுத்த சில வழிமுறைகளை பின்பற்றி இந்த மூலிகை மைசூர்பா தயார் செய்ததாகவும் இதில் 19 வகையான மூலிகை பொருட்களை கொண்டு இந்த மைசூர்பாகை தயார் செய்துள்ளதாகவும் இது உடனடியாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்த்து உடலில் இருக்கக்கூடிய கொரோனா வைரஸை அழிக்கும் என்று இவர் கூறினார். மேலும் ஒரு நாளைக்கு நான்கு துண்டுகள் சாப்பிட்டு வந்தால் விரைவில் இந்த நோயிலிருந்து விடுபடலாம் என்றும் அப்படி நோய்வாய்ப்பட்டவர்கள் சாப்பிட்டு வந்து நோயிலிருந்து விடுபட்டதாகவும் கூறினார். மேலும் அரசு விரும்பினால் இந்த மூலிகை மைசூர்பா இலவசமாக தயாரித்து வீடு வீடாக கொண்டு சேர்க்கவும் தயாராக இருப்பதாகவும் கூறினார். மேலும் இதை நாட்டின் பிரதமர் முன்னிலையில் ஒப்படைக்க வேண்டும் எனவும் இதன்மூலம் உலக அரங்கில் இந்தியா பெருமைப்பட வேண்டும் என்பதே அவருடைய குறிக்கோள் என்றுரைத்தார். ஒரே நாளில் கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்கள் குணமாகும் அதிசயம் என நோட்டீஸ் அடித்து விளம்பரப் படுத்தி வரும் கடை உரிமையாளரால் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது.

இதனை அறித்த உணவு , சுகாதாரம் மற்றும் சித்தா துறையினுடைய அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதனை தொடர்ந்து 19 மூலிகைகளில் மைசூர்பா செய்த கடையின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர். அரசின் எந்த அனுமதியும் இல்லாமல் இது போன்ற உணவு தயாரிப்பு செய்தலை தவறு என்று கூறிய அதிகாரிகள் அவர் தவறான தவலை பரப்புவதாக கூறி நடவடிக்கை மேற்கொண்டனர். சுகாதாரத்துறை ஒருபுறம் மருந்து கண்டு பிடிக்க போராடும் வேலையில் மறுபுறம் இது போன்ற தவறான தகவலை கூறிவரும் இவர்கள் போன்றோரை நடவடிக்கை எடுக்க மும்மரம் காட்டும் துறை சார்ந்த அலுவலர்கள் கொரணா மைசூர்பா கடைக்கு சீல் வைத்தனர். அவரிடமிருந்து 120 கிலோ எடை மைசூர்பா சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலானது பறிமுதல் செய்தனர். மேலும் கடையின் உரிமத்தை ரத்து செய்தனர்.

மேலும் படிக்க