June 9, 2020
தண்டோரா குழு
கொரனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் விடுத்ததை தொடர்ந்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் முன் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம் உள்ளிட்டோர் தலைமையில்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது,கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாதம் ரூ 7.500 உடனடியாக வழங்க வேண்டும், சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு ஒரு லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்,மின் கட்டண கொள்ளையை நிறுத்தி யூனிட் கணக்கு இரண்டு மாதம் என பிரித்து கணக்கீடு,விவசாயிகளின் கடன்களை ரத்து செய் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.