• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொப்பரை கொள்முதலை அதிகரிக்க தொண்டாமுத்தூர், அன்னூரில் 2 புதிய கூடுதல் கொள்முதல் நிலையங்கள் அறிவிப்பு கலெக்டர் தகவல்

June 3, 2022

விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் கொப்பரை கொள்முதலை அதிகரிக்க தொண்டாமுத்தூர் மற்றும் அன்னூரில் 2 நிறுவனங்களை புதியதாக கூடுதல் கொள்முதல் நிலையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலெக்டர் சமீரன் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், வருவாயை பெருக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒன்றிய அரசின் நாபெட் நிறுவனத்தின் மூலம் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் வாயிலாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனுக்காக தேங்காய் கொப்பரை கிலோ ரூ.105.90க்கும், பந்து தேங்காய் கொப்பரை கிலோ ரூ.110.00க்கும் கொள்முதல் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, நெகமம், செஞ்சேரி, ஆனைமலை மற்றும் கிணத்துக்கடவு ஆகிய 5 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை கொப்பரை கொள்முதல் நிலையங்களாக அரசு அறிவித்தது. தற்போது கொப்பரை கொள்முதலை அதிகரிக்க தொண்டாமுத்தூர் மற்றும் அன்னூரில் 2 நிறுவனங்களை புதியதாக கூடுதல் கொள்முதல் நிலையங்களாக அறிவித்துள்ளது. இதுவரை 1099.2 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கிக் கணக்கு ஆகிய விவரங்களுடன் தங்கள் அருகிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளரை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் தேங்காய் கொப்பரைக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க