October 3, 2020
தண்டோரா குழு
கோயமுத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அக்டோபர் 02, தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு கோவிட் 19 விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரியின் என்.எஸ்.எஸ் சார்பாக மலைவாழ் மக்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது.
கொண்டனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 500 –க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராம மக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கி மகாத்மா காந்தியடிகளின் மனிதநேயத்தைப் பறைசாற்றினர். என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர்கள் பிரகதீஷ்வரன், சுபாஷினி மற்றும் நாகராஜ் ஆகியோர் இந்நிகழ்வை முன்னின்று நடத்தினர்.