November 3, 2017
தண்டோரா குழு
சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 சிறுமிகளின் குடும்பங்களுக்கு தலாரூ.10 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் பெய்து வந்த கனமழை காரணமாக கொடுங்கையூரைச் சேர்ந்த பாவனா, யுவஸ்ரீ என்ற இரண்டு சிறுமிகள் நேற்று முன் தினம்(நவ 1) மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.இச்சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 சிறுமிகளின் குடும்பங்களுக்கு அரசு தரப்பில் ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில்,கூடுதல் நிவாரண தொகையாக தலா ரூ.10 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.