• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை நிறுத்த தமிழக முதல்வர் கடிதம்

June 16, 2017 தண்டோரா குழு

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

கொசஸ்தலை ஆற்றின் கிளை ஆறான லங்கா ஆற்றில் நான்கு இடங்களில் ஆந்திர அரசு தடுப்பணைகளை கட்டும் பணியை தொடங்கியுள்ளது. கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.

மேலும் தடுப்பணை கட்டுவது குறித்து தமிழக அரசுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்காமல், ஆந்திர அரசு தன்னிச்சையாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

எனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை அறிந்த பி்ன்னரே தடுப்பணை பணி குறித்து முடிவெடுக்க வேண்டும். மேலும் தடுப்பணை பணியை நிறுத்த உடனடியாக ஆந்திர அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தடுப்பணை கட்ட தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த மூன்று நாட்களுக்கு முன் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க