• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கையுறை விற்பனை செய்து ஒரு கோடி மோசடி: பெண் தொழிலதிபர் ஜாமீன் மனு தள்ளுபடி

February 2, 2021 தண்டோரா குழு

தரம் குறைந்த கையுறைகளை விற்று ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த பெண் தொழிலதிபர் ஜாமின் மனு இரண்டாவது முறையாக மீண்டும் டிஸ்மிஸ் செய்யப்பட்டது.

கோவை கவுண்டம்பாளையத்தில் புளு ஆர்ச் சிட்ஸ் என்ற கையுறை தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதன் நிர்வாக இயக்குனராக கீதா அகர்வால் (31), இயக்குனராக, பாலாஜி ஆகியோர் ஹைதராபாத்தை சேர்ந்த தொண்டு நிறுவனத்திற்கு ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான கையுறையை விற்பனை செய்தனர். கையுறை தரமற்றதாக இருந்ததால் திருப்பி அனுப்பிய பணத்தை திருப்பித் தருமாறு கேட்டபோது மறுத்ததால் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரித்து கீதா அகர்வால், பாலாஜி ஆகியோரை கைது செய்தனர்.

கீதா அகர்வால் ஜாமீனில் விடுவிக்க கோரி ஏற்கனவே தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் நேற்று செய்தனர். விசாரித்த நீதிபதி சக்திவேல் ஜாமீன் மனுவை மீண்டும் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.

மேலும் படிக்க