• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கே.பி.ஆர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் படித்த 24 பேர் அதிகாரிகளாக தேர்வு

August 6, 2020 தண்டோரா குழு

கோவையில் உள்ள கே.பி.ஆர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வந்தவர்களில் இந்தாண்டு 24 பேர் அதிகாரிகளாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மத்திய அரசு பணியில் சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வு கடந்த மார்ச் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற்றது. இந்த நிலையில் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் கே.பி.ஆர் ஆகாடமியில் படித்த 24 பேர் அதிகாரிகளாக தேர்ச்சி பெற்றுள்ளனர். கோவை காந்திபார்க் பகுதியில் செயல்பட்டு வரும் கே.பி.ஆர் ஐஏஎஸ் அகாடமியில் படித்து இதுவரை 40க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்த செய்தியாளர் சந்திப்பு கே.பி.ஆர் ஐஏஎஸ் அகாடமியில் இன்று நடைபெற்றது.

அப்போது அகாடமியின் நிர்வாக இயக்குநர் கே.பி.டி. சிகாமணி கூறியதாவது:

கோவை சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மிகுந்த திறமைசாலிகளாக உள்ளனர். இந்த அகாடமி தொடங்கப்பட்டது முதல் குறைவான அளவிலேயே மாணவர் சேர்க்கை இருந்தது.இங்கு படித்து, கடந்தாண்டு 9 பேரும், அதற்கு முந்தைய ஆண்டு 6 பேரும் அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டனர். கோவையில் பல அதிகாரிகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த அகாடமி செயல்பட்டு வருகிறது.அகில இந்திய அளவில் ஆயிரக்கணக்கானோர் இந்த தேர்வில் போட்டியிட்டு 820 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் எங்கள் அகாடமியில் மட்டும் 24 பேர் தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.இந்த தேர்வுக்கு தயாராக சென்னைக்கு சென்று 1.5 லட்சம் வரை கட்டணம் செலுத்தி, உணவு விடுதிக்கு செலவு செய்து சிரமப்பட்டு வந்த சூழலில், இந்த அகாடமி மாதம் ரூ.3 ஆயிரம் என்ற குறைந்தபட்ச கட்டணத்தில் அதிகாரிகளை உருவாக்கியுள்ளது.கே.பி.ஆர் மில் தொழிலாளி ஒருவர் இந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் 571 மதிப்பெண் பெற்றுள்ளா. கே.பி.ஆர் மில்லில் பணிபுரிந்து 550 மதிப்பெண் பெற்றவ அனைவருக்கும் கேபிஆர் கலை அறிவியல் கல்லூரியில் மூன்றாண்டுகள் இலவச படிப்பு வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய வனப்பணி துறை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட கீதாஞ்சலி கூறியதாவது:

தொடர்ந்து 5 முறை முயற்சித்து அதன் பலனாக நான் இந்த முறை தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். நான் தேர்வில் வெற்றி பெற எனது குடும்பம் மிகவும் உதவியது. குறிப்பாக எனது அம்மா எனக்கு உதவினார். ஆனால், அவர் தற்போது இல்லை.மாணவர்கள் விடாமுயற்சியுடன் படித்தால் இந்த தேர்வில் வெற்றி பெற முடியும். இந்திய வன பணி என்பது ஐஏஎஸ் பணி போன்றதே இந்த பணி மூலம் மலைவாழ் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்ய முடியும். இயற்கை, கால நிலை பிரச்சனைகளை சரி செய்த முடியும்.மழை வாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க