• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ரத்தம் சொட்டச் சொட்ட நடந்த கத்தி போடும் சவுடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா

September 30, 2017 தண்டோரா குழு

கோவையில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ரத்தம் சொட்டச் சொட்ட கத்தி போடும் திருவிழா நடைபெற்றது.

கோவையில் டவுன்ஹால் அருகே ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில உள்ளது. ஆண்டுதோறும் அம்மனை அழைப்பதற்காக இந்தக் கோவிலுக்குப் பாத்தியப்பட்ட மக்கள் கத்திபோடும் திருவிழாவை நடத்தினர்.

பூமார்க்கெட்டில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் இந்தக் கத்தி போடும் திருவிழா ஊர்வலம் துவங்கியது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் “வேசுக்கோ… தீசுக்கோ…” என்று பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் கத்தியால் உடலை வெட்டிக் கொண்டே அம்மனை அழைத்தனர். இதனால் அந்த பக்தர்களின் உடலில் ரத்தம் வழிந்தோட ஆரம்பித்தது. ஆனாலும் அவர்கள் அதையெல்லாம்கண்டுகொள்ளவில்லை.

மேலும், அந்த வெட்டுக் காயங்களின் மீது திருமஞ்சனப் பொடியை ஒற்றி வைத்துக் கொண்டு, தொடர்ந்து “வேசுக்கோ…தீசுக்கோ…” என்று ஆடிக்கொண்டே சென்றனர். இந்தப் பொடியை வைத்தால் மூன்று நாட்களில் காயம்சரியாகிவிடும் என்பது இந்த பக்தர்களின் அபார நம்பிக்கை.

பின்னர் அந்த ஊர்வலம் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் முடிவடைந்தது. அப்போது அம்மனுக்கு விசேஷ பூஜைநடத்தப்பட்டது. தொடர்ந்து அம்மன் திருக்கல்யாணமும் நடந்தது.

மேலும் படிக்க