June 25, 2020
தண்டோரா குழு
கோவையில் இன்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று எம்.ஜி.ஆர்.,மார்க்கெட் முன்பு உள்ள டீக்கடைக்காரர், சுங்கம் கட்டணம் வசூலிக்கும் நபர், மார்க்கெட்டுக்கு வெளியில் வியாபாரம் செய்பவர் மற்றும் அண்ணா மார்க்கெட் வியபாரி ஒருவர் என மொத்தம் 4 பேருக்கு பாதிப்பு இருப்பது சுகாதாரதுறையினர் மேற்கொண்ட பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது. இதனால் அப்பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதைப்போல்,பொள்ளாச்சி கோட்டூர் காவல்நிலையத்தில் பணிபுரியும் சப் இன்ஸ்பெக்டர், துாய்மை பணியாளர் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தெலுங்கு பாளையத்தில் ஒரே குடும்பத்தை சேரந்த 35, 23 வயது ஆண் பெண்,14 வயது சிறுமி, ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த 31 வயது இளைஞர், பள்ளபாளையத்தை சேர்ந்த 40 வயது ஆண், கோவைபேரூரை சேர்ந்த 32 வயது இளைஞருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பிற பகுதிகளை சேர்ந்த 30 மற்றும் 43 வயது ஆண்,நெய்வேலியில் இருந்து கோவை வந்த வடமதுரையை சேர்ந்த 45 வயது ஆணுக்க பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மேலும்,கோவை பெரியகடை வீதியை சேர்ந்த 37 வயது ஆண், வெள்ளலுார் எல்.ஜி.நகரை சேர்ந்த 50 வயது ஆண், சலோன் வீதியை சேர்ந்த 36 வயது ஆண், பெரியராயன் வீதியை சேர்ந்த 21 வயது பெண், கோணவாய்க்கால் பாளையத்தை சேர்ந்த 18 வயது இளைஞர், கஞ்சிக்கோணாம்பாளையத்தை சேர்நத் 42 வயது ஆண், 11 வயது சிறுவன், பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த 31 வயது இளைஞர், பூங்கா நகரை சேர்ந்த 17 வயது சிறுவன், 43 வயது பெண், கரும்புக்கடையை சேர்ந்த 34 வயது ஆண் மற்றும் சீடர்பாளையத்தை சேர்ந்த 29 வயது பெண் ஆகியோருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 347 ஆக உயர்ந்துள்ளது. இதில் 175 பேருக்கு குணமடைந்து வீடு திரும்பினர்.170 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.