• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது – மொத்த பாதிப்பு 1,026 ஆக உயர்வு !

July 9, 2020 தண்டோரா குழு

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1026 ஆக உயர்ந்துள்ளது.இறப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பபட்டுள்ளது.

அதன்படி கோவை, குறிச்சியில் செயல்படும் தனியார் கம்பெனியில் பணியாற்றும் 8 பேர், செல்வபுரம் சாவித்திரி நகரை சேர்ந்த 4 பேர்,100 அடி ரோட்டில் உள்ள பிரபல நகைக்கடை ஊழியர்கள் இருவர், மொபைல் கடை ஒன்றில் பணியாற்றும் ஒருவர் என 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கோவை சுந்தராபுரம், பி.என்.பாளையம் வஞ்சிமாநகர், ரெட்பீல்ட்ஸ், வரதராஜபுரம், சவுரிபாளையம், பேரூர் செட்டிபாளையம், சுக்கிரவார்பேட்டை, காந்திபார்க், விநாயகபுரம், எல்.ஐ.சி.,காலனி, சின்னியம்பாளையம், கவுண்டம்பாளையம், ஆர்.எஸ்.புரம், தெலுங்குபாளையம், வடவள்ளி, காமராஜ் ரோடு, கருமத்தம்பட்டி, சுகுணாபுரம், ஜி.என்.மில்ஸ், குரும்பர் லேன், எஸ்.எஸ்.குளம், புலியகுளம், ராஜாவீதி, அவினாசி ரோட்டில் உள்ள தண்டுமாரியம்மன் கோவில் வீதி, என மொத்தம் 50 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. இதில், 39 ஆண்கள் 11 பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் கோவை மாவட்டத்தில்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 1,026 ஆக உயர்ந்தது. மேலும், இ.எஸ்.ஐ.,மருத்துவமனையில்
கோவையை சேர்ந்த இருவர் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.

மேலும் படிக்க