• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவிட் விழிப்புணர்வு கேக் கண்காட்சி கவுண்டம்பாளையத்தில் யம்மி கேக்ஸ் ஏற்பாடு

August 13, 2021 தண்டோரா குழு

தமிழ்நாட்டில் முறையாக கோவையில் உள்ள யம்மி கேக்ஸ் புதிய விற்பனையகத்தில் கோவிட் 19 விழிப்புணர்வு, தடுப்புசி அவசியம் பற்றிய கருத்துடன் 40 வகையான கேக் கண்காட்சி நடைபெற்றது.

கோவையில் முதல் முறையாக, கவுண்டம்பாளையத்தில் கோவிட் 19 மற்றும் தடுப்புசி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, முக கவசம் அணியவும், சமுக இடைவெளியை கடைபிடிக்கவும், நலமுடன் வாழ, பாதுகாப்பாக இருங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய கேக் கண்காட்சி, யம்மி கேக்ஸ் புதிய விற்பனையகத்தில் நடைபெற்றது.

இந்த கண்காட்சியில், 40 வகையான கேக், 2, முதல் 3 கிலோ,4 கிலோ வரையிலான கேக் இடம் பெறுகிறது.ஸ்ட்ராபெர்ரி, பிளாக் பாரஸ்ட், வெணிலா, ப்ளுபெர்ரி மற்றும் பழக் கலவையின் மணத்தில் கிடைக்கிறது.கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, கொரோனா கேக் என்ற பெயரில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பலவகையான கேக் விற்பனைக்கு வைக்கப்படும்.கோவிட் விழிப்புணர்வு கேக், 4 முதல் 5 கிலோ வரையிலும், 8 அடி உயரத்தில் மயில் வடிவிலான வகை கேக், கண்காட்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

யம்மி கேக்ஸ் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் விஜயக்குமார்,
செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழ்நாட்டிலேயே, கோவையில் இந்த கண்காட்சியை நடத்துகிறோம்.ஒரே ஒரு கேக் தான், பெயரை ஏற்படுத்தும்.நாங்கள் முதல்முறையாக சமுதாய விழிப்புணர்வு தரும் கேக்குகளை உருவாக்கியுள்ளோம்.அனைத்து வகையான மாடல் கேக்குகளும், சமுதாய கருத்துக்களை உள்ளடக்கியவை. அனைத்தும் கவனமுடன் மேற்கொள்ளப்படுகிறது.அனைத்து வகையிலும் நமது வாழ்வில் உணவும் உடையும் பல வகைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

தொற்று நோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல உணவு பொருட்கள் வெளிப்பத்தும் வகையில், இடம் பெறுகின்றன.தற்போது இதில், கொரோனா விழிப்புணர்வு கேக் வகைகளும், தடுப்புசியை விளக்கும் கேக் பேன்றவை இடம் பெற்று வருகின்றன. கவுண்டம்பாளையத்தில் நாங்கள் துவக்கியுள்ள புதிய விற்பனையகத்தில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கேக்குகளை சிறப்பான முறையில் வடிவமைத்துள்ளோம். நாங்கள், பிறந்த நாள், திருமண நாள், போட்டோ கேக், முட்டையில்லா கேக் உள்ளிட்டவைகளை அளித்து வருகிறோம்,” என்றார்.

மேலும், எங்களது இந்த புதிய விற்பனையகத்திற்கு வந்து பார்வையிடவும், புதிய கருத்தாக்கமிக்க கேக் மற்றும் விதவிதமான கேக்குகளை வாங்கவும் விரும்புவோர் 73737 81178 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். www.yummycakescbe.com என்ற இணையத்தளத்திலும், யம்மிகேக்ஸ் என்ற சமுக ஊடக பக்கத்திலும் பார்வையிடலாம் என்றார்.

மேலும் படிக்க