• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 10 டன் ரேசன் அரிசி பறிமுதல் – லாரி டிரைவர் கைது

November 25, 2021 தண்டோரா குழு

கேரளாவுக்கு மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுகிறது. அதுபோல் நேற்று இரவும் லாரி ஒன்றில் அரிசி கடத்தப்படுவதாக மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இன்ஸ்பெக்டர் வைரம் தலைமையில், எஸ்.ஐ.கவியரசு, எஸ்.எஸ்.ஐ., கதிரேசன், போலீஸ்காரர் குமரேசன் ஆகியோர் மதுக்கரை மரப்பாலம் அடுத்த பெட்ரோல் பங்க் அருகே, கோவை – பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரிந்தது இதையடுத்து லாரியை மதுக்கரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று சோதனை செய்தனர் அதில் 50 கிலோ வீதம், 200 மூட்டைகளில், 10 டன் அரிசி இருந்ததும்.சுந்தராபுரம் பகுதியிலிருந்து,
கேரள மாநிலம் கஞ்சிக்கோட்டுக்கு கடத்திச் செல்வதும் தெரியவந்தது.

இதையடுத்து லாரி டிரைவர் பாலக்காடு மாவட்டம் நல்லேபிள்ளை, நீலிப்பதனை சேர்ந்த ராமகிருஷ்ணன், 39 என்பவரை கைது செய்தனர். பின்னர் பொள்ளாச்சி குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. இதேபோன்று பீளமேட்டில் கடத்தப்பட்ட 2 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க