• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி – கோவைக்கு வரும் வாகனங்கள் தீவிர சோதனை

January 5, 2021 தண்டோரா குழு

பறவை காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில், கேரளாவில் இருந்து கோழி, வாத்து முட்டை, இறைச்சி, தீவனங்களை கொண்டு வரும் வாகனங்களை திருப்பி அனுப்பபட்டு வருகிறது.

கேரளாவில் ஆலப்புழா மற்றும் கோட்டயத்தில் வாத்து மற்றும் கோழிகள் திடீரென செத்து மடிந்தன. இதனால் இறந்த வாத்துகளிலிருந்து 8 மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, இதில் ‘எச் 5 என் 8’ வகை வைரஸ் என்று சொல்லப்படும் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்துள்ளது. அங்கு பறவை காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், தொடர்ந்து வாத்து கோழிகள் உயிரிழந்து வருகின்றன. இதனால் சுற்று வட்டாரத்தில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோழி மற்றும் வாத்துக்களை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பறவை காய்ச்சல், தமிழகத்துக்குள் வராமல் தடுக்க கோவை வாளையார் சோதனை சாவடியில் கால்நடை துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் கேரளாவில் இருந்து கோழி, வாத்து முட்டை, இறைச்சி, தீவனங்களை கொண்டு வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர் ,மேலும் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் மற்ற வாகனங்களுக்கு குளோரின்-டை-ஆக்ஸைடு தெளிக்கபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க