• Download mobile app
28 Oct 2025, TuesdayEdition - 3548
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவில் பரவும் வைரஸ் காய்ச்சல் இதுவரை 118 பேர் பலி

June 20, 2017 தண்டோரா குழு

கேரளா மாநிலம் முழுவதும் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக உயிரிழ்ந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது.

டெங்கு, பன்றி காய்ச்சல் என்று கேரள மாநிலம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.குறிப்பாக திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொச்சின் ஆகிய இடங்களில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

மக்கள் எச்1என்1, டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கடந்த 4 மாதங்களில் மட்டும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழ்ந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது என்று கேரளா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

மேலும், எச்1என்1, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 250 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் ஏராளமானோர் அரசு மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறும்போது,

காய்ச்சல் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுற்றுப்புறத் தூய்மையை பேணுமாறு வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க