August 7, 2020
தண்டோரா குழு
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளானது.
துபாயிலிருந்து பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (ஐ.எஸ். 1344), இன்று இரவு 7.45 மணியளவில் கேரளாவின் கோழிக்கோடு காரிப்பூர் விமான நிலையம் நோக்கி தரையிறங்கியது. அப்போது
எதிர்பாராத விதமாக ஓடுதளத்தில் இருந்து விமானத்தின் சக்கரம் விலகியதால் ஓடுபாதையை விட்டு விலகி விமானம் விபத்திற்குள்ளானது.இந்த விமானத்தில் 10 குழந்தைகள் உட்பட 185 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில் விமானி உயிரிழந்து உள்ளதாகவும், துணை விமானி படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.