• Download mobile app
28 Oct 2025, TuesdayEdition - 3548
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவில் சாமியாரின் ஆணுறுப்பு துண்டித்த மாணவியை கடத்திய சாமியார் ஆட்கள்

June 20, 2017 தண்டோரா குழு

கேரளாவில் சாமியாரின் ஆணுறுப்பை துண்டித்த மாணவியை அவரின் ஆட்கள் கடத்தி வைத்துள்ளதாக மாணவியின் காதலன் உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த சுவாமி கணேசானந்தா என்ற சாமியார், சட்டக்கல்லூரி மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற போது சாமியாரின் ஆணுறுப்பை மாணவி அறுத்து எறிந்தார். இந்த மாணவியின் இந்த செயல் துணிச்சலானது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் பாராட்டியிருந்தார். இதையடுத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், சாமியாரின் ஆணுறுப்பு துண்டிக்கப்பட்ட வழக்கில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. ஆரம்பத்தில் தான் சாமியார் என்பதால் தனது ஆணுறுப்பு தனக்கு அவசியப்படாது என்பதால் தானே அதனை அறுத்துக் கொண்டதாக சாமியார் வாக்குமூலம் அளித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு சர்ச்சைக்குள்ளான மாணவியே சாமியாரின் உறுப்பை நான் வெட்டவில்லை, காவல்துறையினரே அவ்வாறு கதை கட்டி விட்டனர் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சட்டக்கல்லூரி மாணவியை சாமியாரின் ஆட்கள் கடத்தி வைத்துள்ளதாக, அவரின் காதலன் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில்,

சமீபத்தில் மாணவி அளித்த மாற்று வாக்குமூலம் கூட சாமியார் ஆட்கள் மிரட்டுதலின் பேரில் தான் என்றும், சாமியாரின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவியே அவரின் அந்தரங்க உறுப்பை வெட்டியது தான் நிஜம் என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க