• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவில் சர்ச்சையை கிளப்பிய பள்ளி சீருடை

June 13, 2017 தண்டோரா குழு

கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் சீருடை ஆபாசமாக உள்ளதாக கூறி போட்டோகிராபர் ஒருவர் வெளியிட்ட புகைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஜாசாரிக் போகுனம் என்ற போட்டோகிராபர் தனது பேஸ்புக் பக்கத்தில் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், அருவிதுரா என்ற இடத்தில் ஒரு பள்ளி உள்ளது. அப்பள்ளியில் படிக்கும் மாணவியரின் சீருடை அநாகரிகமாக உள்ளது எனக்கூறி புகைபடத்துடன் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

மேலும், அந்த புகைப்படத்தை கோட்டயத்தில் உள்ள இராடுபெட்டா என்ற இடத்தை சேர்ந்த தனது நண்பர் அனுப்பி இருந்ததாகவும் போகுனம் அப்பதிவில் அவர் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து, அப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அந்த பள்ளி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனால்,பெரும் விமர்சனத்துக்கு உள்ளான அப்பள்ளி நிர்வாகம் அந்த புகைப்படத்தை எடுத்த போஸ் இயபென் என்பவர் மீது ‘போக்சோ’ எனப்படும் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து தடுக்கும் சட்டத்தின் கீழ், பள்ளி நிர்வாகம் போலீஸில் புகார் அளித்தது. இதனைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ், போலீசாரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து பள்ளி முதல்வர் கூறும்போது,

அந்த புகைப்படத்தில் இருப்பது நாங்கள் அளித்த பள்ளி சீருடை அல்ல அது மார்பிங் செய்யப்பட்டுள்ளது. சீருடை குறித்து மாணவியரின் பெற்றோர்கள் கூட இதுவரை புகார் அளித்தது இல்லை எனக் கூறியுள்ளார்.

அதைபோல், பள்ளி சீருடை குறித்து எந்த புகாரும் இல்லை. எந்த பெற்றோரும் புகார் கூறவில்லை. பள்ளி சீருடைகள் இடம் பெற்று இருக்கும் புத்தகத்தை அடிப்படையாக வைத்தே பள்ளி சீருடை உருவாக்கப்பட்டுள்ளது. ஆபாசம் என்பது பார்ப்பவர்களின் பிரச்னை, என பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சாபு சிரிக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க