• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவில் ஓரு கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் வாழ்ந்த இல்லம் திறப்பு !

February 26, 2019 தண்டோரா குழு

கேரளாவில் ஓரு கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் வாழ்ந்த இல்லத்தை கேரள ஆளுநர் சதாசிவம் திறந்து வைத்தார்.

கேரளா மாநிலம் பாலக்காடு அருகே உள்ள வடவனூரில் எம்.ஜி.ஆர் வாழ்ந்த பூர்வீக இல்லம் உள்ளது. அங்குதான் எம்.ஜி.ஆரின் இளைமை காலம் கழிந்தது. இவ்வீடு பராமரிப்பின்றி சிதிலமடைந்து இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதையடுத்து, பழுதடைந்த இந்த இல்லத்தை மனிதநேய ஐ.ஏ.எஸ் கல்வி மையம் சீரமைத்தது. சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட இந்த இல்லத்தில் எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலை, எம்.ஜி.ஆரின் பெற்றோர்கள் சிலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இதனை இன்று அம்மாநில ஆளுநர் சதாசிவம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மனித நேய அறக்கட்டளையின் நிறுவனர் சைதை துரைசாமி, MGR அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றிய முக்கிய அமைச்சர்கள். மற்றும் கேரளா மாநில சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள்.

மேலும் படிக்க