February 18, 2019
தண்டோரா குழு
கூகுள் மேப் செய்த குளறுபடியால், சரியான வழித்தடத்தை பொதுமக்களே பேனரில் எழுதி, தொங்கவிட்ட சம்பவம் கோவாவில் அரங்கேறியுள்ளது.
கூகுள் நிறுவனம் ஏராளமான வசதிகளை பொது மக்களுக்கு வழங்கி வருகின்றது. இதில் முக்கியமானதாக கருத்தப்படுவது கூகுள் மேப் ஆகும். இதை வைத்து தான் உலகமே இயங்கி வருகின்றது என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்து நிற்கின்றது கூகுள் மேப். இன்று நாம் செல்லும் இடங்களுக்கும் வழிகாட்டியாகவும் இருக்கின்றது.
கோவாவில் உள்ள பிரபல கடற்கரையான பகா கடற்கரைக்குச் செல்லும் வழித்தடமானது கூகுள் மேப்பில் பிழையாக குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் கூகுள் மேப்பைப் பார்த்து அந்த பீச்சுக்கு வருவோர் தவறுதலாக வேறொரு பகுதிக்கு சென்றுவிடும் சம்பவம், அடிக்கடி நேர்ந்துள்ளது.
இந்நிலையில் மக்கள் இந்த பிரச்சினைக்கு முடிவுகட்ட முடிவெடுத்த, கூகுள் மேப் உங்களை ஏமாற்றிவிட்டது எனவும் இந்த வழியில் பகா பீச்சுக்கு செல்ல முடியாது எனவும் அது 1 கிலோ மீட்டருக்கு அந்தப் பக்கம் உள்ளது எனவும் பேனரில் எழுதி அந்த சாலையில் தொங்கவிட்டுள்ளனர்.