• Download mobile app
14 Feb 2026, SaturdayEdition - 3657
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கூகுள் மேப் அப்டேட் செய்யப்படாததால் குரூப் ஒன் தேர்வு எழுத முடியாமல் தவித்த மாணவி

November 19, 2022 தண்டோரா குழு

கோவை பீளமேடு பகுதி நேஷனல் மாடல் பள்ளி இன்று குரூப் ஒன் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் 45 அறைகளில் தேர்வாளர்கள் இந்த தேர்வை எழுதி வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை வடவள்ளி சேர்ந்த ஐஸ்வர்யா குரூப் ஒன் தேர்வு எழுத வந்துள்ளார். அவரது செல்போனில் கூகுள் மேப் பார்த்துக் கொண்டு இடம் தெரியாமல் தவித்துள்ளார். பல்வேறு இடங்களில் சுற்றி விட்டு கடைசியாக நேஷனல் மாடல் பள்ளியை கண்டுபிடித்து வந்துள்ளார்.ஆனால் ஐந்து நிமிடம் தாமதமாக வந்ததால் தேர்வு எழுத நிர்வாகிகள் உள்ளே விட மறுத்துள்ளனர்.

இது குறித்து ஐஸ்வர்யா கூறும் போது,

2019 ஆம் ஆண்டு முதல் இந்த தேர்வுக்காக நான் தயாராக இருந்தேன். பள்ளி நிர்வாகம் கூகுள் அப்டேட் செய்யப்படாததால் எனது வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது என தெரிவித்துள்ளார். இதே போல இருபதுக்கு மேற்பட்ட மாணவர்கள் தாமதமாக வந்ததால் தேர்வு எழுதாமல் திரும்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க