• Download mobile app
18 Apr 2024, ThursdayEdition - 2990
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குழந்தை தொழிலாளர்கள் தொடர்பாக கோவையில் 1029 நிறுவனங்களில் ஆய்வு

June 14, 2022 தண்டோரா குழு

சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவை தொழிலாளர் துறையினரால் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கம் கலெக்டர் சமீரன் முன்னிலையில்,
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியால் கையொப்பமிட்டு துவக்கி வைக்கப்பட்டது.

இதில் கோவை எம்பி பி.ஆர்.நடராஜன், மாநகராட்சி மேயர் கல்பனா,மாநகராட்சி ஆணையர் பிரதாப் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.கோவை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கோவை மத்தியபேருந்து நிலையம், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம்
மற்றும் பொள்ளாச்சி பேருந்து நிலையங்களில் கையெழுத்து இயக்கம் கோவை, தொழிலாளர் இணை ஆணையர், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மற்றும் கோவை, தொழிலாளர் உதவி ஆணையர்கள் மூலம் நடத்தப்பட்டது.

மேலும் அரசு பேருந்துகளிலும்
குழந்தைத்தொழிலாளர் முறை எதிர்ப்பு தொடர்பாக ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.
மாவட்டத்தில் அனைத்து இடங்களில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பாக துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பணியில் ஈடுபடுத்துவது மற்றும் 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் அமர்த்துவது தண்டனைக்குரியதாகும்.குழந்தைகளை பணிக்கு அமர்த்தினால் ரூ.50,000 வரை அபராதம் மற்றும் 2 வருட சிறை தண்டனை விதிக்கப்படும்.

கடந்த ஆண்டு தொழிலாளர் துறை சார்பில் 1029 நிறுவனங்களில் ஆய்வுமேற்கொள்ளப்பட்டு, குழந்தைத் தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்களை பணி அமர்த்திய நிறுவனங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு,தற்போது வரை ரூ.3,70,000 அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கோவை தொழிலாளர் துறை உதவி ஆனையர் (அமலாக்கம்) தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க