• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குழந்தை செய்த தவறை மன்னிக்கலாம், முதிர்ச்சி அடைந்த நபரின் குற்றத்தை மன்னிக்க முடியாது – நீதிபதி கருத்து

May 10, 2018

குழந்தை செய்த தவறை மன்னிக்கலாம்,முதிர்ச்சி அடைந்த நபரின் குற்றத்தை மன்னிக்க முடியாது என எஸ்.வி.சேகரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி ராமதிலகம் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகரும் பாஜக ஆதரவாளருமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிக்கையார்களை அவதூறாக விமர்சித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து இருந்தார்.இதற்கு தமிழகம் முழுவதும் பத்திரிக்கையாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.இதற்கிடையில் பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சித்து கருத்து தெரிவித்திருந்த விவகாரத்தில்,4 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து,கைது நடவடிக்கைக்கு அஞ்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்திருந்தார்.இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் நடிகர் எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில்,எஸ்.வி.சேகரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்தது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி ராமதிலகம் கருத்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறும்போது,

எஸ்.வி.சேகரின் ஃபேஸ்புக் கருத்து தனிநபருக்கு எதிரான கருத்து மட்டுமல்ல;பெண் இனத்திற்கு எதிரான கருத்தாகும்.பணியில் இருக்கும் பெண்கள் குறித்து அந்த பதிவில் சொன்னதைவிட கடுமையாக சொல்ல முடியாது. இதுபோன்ற கருத்துகளால் பெண்கள் பொது வாழ்க்கைக்கே வரமுடியாத சூழலை ஏற்படுத்தும்.ஃபேஸ்புக் கருத்து பரிமாற்றம் பற்றி எஸ்.வி.சேகர் வருத்தம் மட்டுமே தெரிவித்துள்ளார்,கருத்துகளை மறுக்கவில்லை.பெண்களுக்கு எதிரான இதுபோன்ற கருத்துகளை சொல்ல யாருக்கும் உரிமையில்லை.குழந்தை செய்த தவறை மன்னிக்கலாம்,முதிர்ச்சி அடைந்த நபரின் குற்றத்தை மன்னிக்க முடியாது ஃபேஸ்புக் கருத்தை உள்நோக்கத்துடன் எஸ்.வி.சேகர் பரிமாற்றம் செய்ததாக தெரிகிறது எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க