தாயே குழந்தையைக் கொலை செய்த வழக்கில் தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை மாவட்டம் செல்வபுரம் அருகே இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த்குமார். இவரது மனைவி திவ்யா. இந்த தம்பதியினருக்கு நான்கு வயதில் ஒரு ஹரிவர்ஷா என்கிற பெண் குழந்தை இருந்தது.
கணவன் – மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. அதன் காரணமாக இருவரும் எப்போதும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதன் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு திவ்யா தனது பெண் குழந்தை ஹரிவர்ஷாவைத் தூக்கிக்கொண்டு தனது தாயார் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அருகில் உள்ள கடையில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 3ம் தேதி வீட்டில் தாயாருடன் ஏற்பட்ட பிரச்னையில் தனது மகள் ஹரிவர்ஷாவைத் துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்றார். இந்த சம்பவம் தொடர்பாக திவ்யா கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு கோவை மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குழந்தையின் தாய் திவ்யாவிற்கு ஆயுள் தண்டனை விதித்து மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் வெள்ளிக்கிழமை உத்திரவிட்டார். இதனையடுத்து திவ்யா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்