• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குழந்தையை கடித்த நாய்க்கு மரண தண்டனை

May 18, 2017 தண்டோரா குழு

குழந்தையைக் கடித்த நாய் ஒன்றுக்கு பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர் ஜமீல். செல்ல பிராணியாக நாய் ஒன்றை அவர் வளர்த்து வந்தார். அவர் வளர்த்து வந்த அந்த நாய் ஒரு குழந்தையை கடித்துள்ளது. இச்சம்பவம் குறித்து அந்த குழந்தையின் பெற்றோர் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.அப்புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகள், அந்த நாயை பிடித்து நாய்கள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இது குறித்து பஞ்சாப் மாகாணத்தின் உதவி ஆணையாளர் ராஜா சலீம் கூறுகையில்,

“குழந்தையை கடித்த காரணத்தால், அந்த நாயை கொல்ல வேண்டும் என்று இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நாயின் பதிவேடுகளை குறித்து சரி பார்க்க அதிகாரி ஒருவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், குழந்தையை கடித்த காரணத்தினால் அந்த நாயின் உரிமையாளர் மீது சிவில் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு நடந்துக்கொண்டு இருக்கிறது” என்று தெரிவித்தார்.

“அந்த குழந்தையின் பெற்றோர் என் நாய்க்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து என் நாய் ஒரு வார தண்டனையை அனுபவித்துள்ளது. இதற்கு மேலும், அதை தண்டிப்பது நியாயமில்லை. என் நாய்க்கு நீதி கிடைக்க பாகிஸ்தானில் உள்ள அனைத்து நீதி மன்றங்களின் கதவுகளை தட்ட நான் தயாராக உள்ளேன்” என்று அந்த நாயின் உரிமையாளர் ஜமீல் தெரிவித்தார்.

அந்த நாயின் உரிமையாளர் இந்த தண்டனைக்கு எதிராக உதவி ஆணையாளரிடம் முறையீடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

மேலும் படிக்க