• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குழந்தையின் உயிரை காப்பாற்றிய 350 ஆம்புலன்ஸ் டிரைவர்கள்

October 13, 2017 தண்டோரா

சென்னை ஒருநாள் படத்தை அனைவரும் பார்த்திருப்போம்.ஹீரோ விபத்தில் மூளை சாவு அடைந்திருப்பார். அவரது இருதயத்தை சென்னையில் இருந்து ஒன்னரை மணி நேரத்தில் வேலூரில் உயிருக்கு போராடி வரும் ஒரு குழந்தைக்கு பொறுத்த வேண்டும்.இதற்காக சேரன் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் வெற்றிகரமாக இருதயத்தை கொண்டு சேர்த்திருப்பார்.படத்தில் இது சாத்தியம் நிஜ வாழ்கையில் அப்படி நடிக்க வாய்ப்பில்லை என நம்மில் பலரும் கூறலாம். ஆனால் உண்மையில் கேரளாவில் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

driver

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு பகுதியை சேர்ந்த ஆதிவாசி இளம்பெண் 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு நேற்று திடீரென வயிறு வலி ஏற்பட்டது. அவரது உறவினர்கள் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். ஆஸ்பத்திரிக்கு வந்த சிறிது நேரத்திலேயே பெண் குழந்தை பிறந்தது.

எனினும், குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்,குழந்தைக்கு நிமோனியா மற்றும் ஜன்னி காய்ச்சல் உள்ளது. அதற்கான சிகிச்சை இங்கு இல்லை திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் மட்டுமே உள்ளது என்றார்.

மேலும்,7 மணி நேரத்திற்குள் அழைத்துச்சென்றால் மட்டுமே உயிர் பிழைக்க வாய்ப்புள்ளது, ஆனால் திருவனந்தபுரத்திற்கு 365 கி.மீ செல்ல வேண்டும், குறைந்தபட்சம் 10 மணி நேரமாகும் என்றும் கூறியுள்ளார். இதனால் குழந்தையை காப்பாற்ற முடியாது என்று குடும்பத்தினர் கதறி அழுதனர்.இவர்களின் கதறல் சத்தத்தை கேட்டு மருத்துவமனை அருகே இருந்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஓடி வந்தனர்.

இதையடுத்து நிலைமையை அறிந்து குழந்தையை காப்பாற்றவேண்டும் என்று முடிவு செய்தனர்.
அதன்படி இது குறித்து மன்னார்காட்டில் இருந்து திருவனந்தபுரம் வரை உள்ள 350 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் தகவல் தெவித்தனர். அவர்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு சென்று விபரத்தை கூறி போக்குவரத்தை சீர் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை 11. 30 மணிக்கு குழந்தையை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் புறப்பட்டது. மன்னார்காட்டில் இருந்து திருவனந்தபுரம் வரை ஆம்புலன்ஸ் டிரைவர்கள் குழந்தையை ஏற்றிச்சென்ற ஆம்புலன்சுக்கு இடையூறு ஏற்படாமல் வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.

இதற்கு அந்தந்த போலீசாரும் உதவி செய்தனர். மாலை 5 மணிக்கு திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் வந்தடைந்தது. பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை அனுமதிக்கப்பட்டு நல்லபடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. 365 கிலோ மீட்டர் தூரத்தை 5½ மணி நேரத்தில் கடந்து வந்து சாதனை செய்தனர்.

குழந்தையை காப்பாற்ற 350 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இணைந்து செயல்பட்டதால் காப்பாற்ற முடிந்ததாக பொதுமக்கள் கூறினர். திரைபடத்தை மிஞ்சும் அளவிற்கு நடந்த இந்த சம்பவத்தின் மூலம் மனிதநேயத்தால் எதையும் சாதிக்கமுடியும் என்பதை அறிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க