• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குழந்தைக்கு பால் ஏற்பாடு செய்த இந்தியன் ரயில்வே

March 17, 2017 தண்டோரா குழு

“பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து…” என்று ஈஸ்வரனைப் பற்றி மாணிக்கவாசகப் பெருமான் பாடியிருக்கிறார்.

அதைப் போல் ஓடும் ரயிலில் பாலுக்காக அழுத ஐந்து மாத பெண் குழந்தையின் நிலையை அறிந்த கொங்கண் ரயில்வே துறை உடனடியாகப் பாலை வழங்கி, பயணிகளை நெகிழவைத்துவிட்டது. இச்சம்பவம் கடந்த மார்ச் 12 ஆம் தேதி நடந்திருக்கிறது.

எல்லாம் ஒரு டுவிட்டர் தகவலுக்கு மதிப்பளித்ததால் இந்த சேவையைப் புரிந்திருக்கிறது கொங்கண் ரயில்வே.

மும்பையிலிருந்து திருநெல்வேலி செல்லும் ஹப்பா எக்ஸ்பிரஸ் ரயிலில் வாசவி ரோடு ரயில் நிலையத்திலிருந்து தனது ஐந்து மாத கைக்குழந்தையுடன் ரத்தினகிரிக்குப் பயணம் செய்துகொண்டிருந்தார்.

ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தபோது அந்தக் குழந்தை பாலுக்காக அழுதது. உடன் பயணம் செய்த ஒருவர், “குழந்தைக்குப் பால் தேவைப்படுகிறது. தனது பெற்றோருடன் அந்தக் குழந்தை கொங்கண் எக்ஸ்பிரஸ் ரயில்வேயின் ஹப்பா எக்ஸ்பிரஸில் பயணம் செய்துகொண்டிருக்கிறது.

அவர்களுடன் பயணம் செய்துகொண்டிருக்கும் ஸ்நேகா பட் என்பவரைத் தொடர்புகொள்ளவும்” என்று கொங்கண் ரயில்வேத் துறைக்கு ட்விட்டர் மூலம் தகவல் அனுப்பினார்.

அத்துடன் அந்தக் குழந்தையின் படம், பெற்றோர்களின் ரயில் டிக்கெட் ஆகியவற்றையும் படம்பிடித்து ட்விட்டருடன் இணைத்து அனுப்பினார்.

உடனே, அந்தப் பயணியிடமிருந்து அனைத்து தகவல்களை ரயில்வே அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர். சரியாக 40 நிமிடம் கழித்து, “பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று அதிகாரிகளஅ பதில் ட்விட் செய்தனர்.

அந்த ரயில் கொலாத் என்ற ரயில் நிலையத்தை அடைந்ததும், அங்கே ரயில்வே பணியாளர்கள் குழந்தைக்குத் தேவையான பாலை வழங்கினர்.

இதை நேரில் கண்ட சக பயணிகள் அனைவரும் கொங்கண் ரயில்வேயின் இந்த விரைவான சேவையை வெகுவாகப் பாராட்டினர்.

சில நேரம் கழித்து, அந்த குழந்தையின் புகைப்படத்தைப் பதிவு செய்த அந்தப் பயணி இந்தியன் ரயில்வேக்கும் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கும் தன் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

மேலும் படிக்க