• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குளிக்காமல் அழுக்கு உடையில் செல்லுங்கள் உங்களை யாரும் ஒன்றும் செய்யமாட்டார்கள் வேதனையில் நரிக்குறவ பெண்கள் !

April 5, 2018 முஹம்மது ஆஷிக் பி.எம்

ரயில்நிலையம், பேருந்து நிலையம், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தோளில் துணியை இறுக்கமாக கட்டிக் கொண்டு கையில் ஊசி, பாசி விற்கும் சிலரை நாம் அதிகமாக பார்த்திருப்போம். அவர்கள் வேறு யாரும் இல்லை நரிக்குறவர்கள் தான். நரிக்குறவர் சமூகத்தினர் தமிழகத்தில் பல ஊர்களில் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் நாடோடிகளை போல் அவ்வப்போது தொழிலுக்காக இடம் பெயர்ந்து கொண்டிருப்பார்கள். நரியை வேட்டையாடுவதாலும் நரியைப் போன்று தந்திரமாக வேட்டையாடுவதாலும் நரிக்குறவர் என்றும் குருவியினங்களைப் பிடிப்பதால் குருவிக்காரன் என்றும் அழைக்கப்பட்டனர்.

ஆரம்ப காலத்தில் மிருகங்களை வேட்டையாடுதலையே தொழிலாக கொண்டிருந்தனர். பின்னர் அரசு வேட்டையாட தடை விதித்ததை தொடர்ந்து பச்சை குத்துதல்,  ஊசி, பாசி, போன்ற சிறு பொருட்களை விற்கும் தொழிலைச் செய்து வருகின்றனர். எனினும், இவர்கள் முன்னர் போல் இல்லாமல் தற்போது தங்கள் சமூகத்தையும் மேம்படுத்திக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இதற்காக, ஒரே இடத்தில் தங்கள் இருப்பிடத்தை அமைத்து தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பியும் வருகின்றனர்.

இந்த வளர்ச்சியடைந்த  நாகரீக சமூகத்திற்கு ஏற்ப நரிக்குறவர்களும் அவர்களுக்குள் நிறைய மாற்றங்களை செய்தனர். உடை காலச்சாரம் முதல் மாற்றக் கொண்டனர். எனினும் அவர்கள் இந்த சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அற்றே வாழ்ந்து வருகிறார்கள்.நாகரீகமடைந்த சமூகமாக தங்களைக் கருதிக்கொள்ளும் பிற சமூகத்தினர் இவர்களை இழிவாக நடத்துவதும், கொடுமைக்குள்ளாக்குவதும், புறக்கணிப்பதும் ஆங்காங்கே பரவலாகக் காணப்படுகிறது. பள்ளிக்கு அபூர்வமாக செல்லும் இச்சமூகத்தினரின் குழந்தைகள் மற்ற சமூகத்தின் கிண்டல் கேலிகளால் பள்ளி செல்லும் ஆர்வத்தை இழக்கின்றனர். அதைபோல் தங்கள் தொழிலுக்கு செல்லும் தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்து பேருந்தில் செல்லும் போது மூட்டையுடன் ஏன் பஸ்ஸில் ஏறுகிறீர்கள் நடத்துனர் தங்களை தரம் தாழ்த்தி பேசுவதாகவும் கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க மற்ற சமூகத்தினரால் பெரும்பாலும் நரிக்குறவ பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆவாதே கூறப்படுகிறது.

இது குறித்து நரிக்குறவ பெண் ஷ்வேதாவிடம் கேட்டபோது, 

நரிக்குறவ பெண்கள் பார்ப்பதற்கு அழகாவும், கவர்ச்சியாக இருப்பதால் மற்ற சமூகத்தினரால் பெரும்பாலும் நரிக்குறவ பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகின்றோம். எங்களால் எதுவும் செய்ய முடியாது நாங்கள் வெளிப்படையாக வெளியில் சொல்லமாட்டோம் என்ற தைரியத்தில் ஒரு சிலர் எங்கள் மீது பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள்.  எனினும் இது குறித்து என்ன செய்வதென்று தெரியாமல் எங்கள் சமூகத்தின் மூத்தவர்களிடம் கேட்டால் நீங்கள் ஏன் இப்படி நாகரீகமான உடை அணிகிறீர்கள். அழுக்கான உடைகளை அணியுங்கள் என்றும் குளிக்காமல் இருங்கள் என்றும் கூறுகிறார்கள். நரிக்குறவர பெண்கள் இதனாலயே பெரிதும் வேதனைக்குள்ளாக்கியுள்ளனர்.

இதனை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தான் நான் ஒரு பள்ளியை நடத்தி வருகிறேன். ஏனெனில் கல்வி மூலமே இதற்கு மாற்றம் கொண்டு வரமுடியும். அதைப்போல் ஊடகமும் எங்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை வெளிப்படுத்த வேண்டும் இதன் மூலம் எங்கள் சமூக பெண்கள் பலரும் வெளிப்படையாக தங்களுக்கு நேரும் குற்றங்களை கூறுவார்கள் என்றார்.

அருண் – நரிக்குறவர்

நரிக்குறவ இனத்தவர்கள் முன்னர் போல் இல்லாமல் எங்கள் தலைமறையின நாங்கள் இந்த நவீன சமூகத்திற்கு ஏற்ப வாழ்ந்து வருகின்றோம். எனினும் வெளியில் செல்லும் எங்கள் பெண்கள் பாலியல் ரீதியான துன்பங்களுக்கு ஆளாவது வேதனையளிக்கிறது.

மேலும் படிக்க