• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குற்றவாளிகளின் தாமதம் செய்யும் யுக்திகளை நீதிமன்றம் புரிந்து கொள்ள வேண்டும் – நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க பேட்டி

February 12, 2020

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு எதிராக புதிய தூக்கிலிடும் உத்தரவு பிறப்பிக்கக் கோரி அரசு மற்றும் நிர்பயாவின் பெற்றோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது நிர்பயாவின் தாயார் கண்ணீர் விட்டு அழுதபடி செய்தியாளர்களிடம் பேசினார்.

செய்தியாளர்களிடம் நிர்பயாவின் தயார் கூறியதாவது:-

7 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. நான் இப்போது நம்பிக்கையையும் இழந்து நிற்கிறேன். குற்றவாளிகளின் தாமதம் செய்யும் யுக்திகளை நீதிமன்றம் புரிந்து கொள்ள வேண்டும். என் மகளுக்கு நீதி கிடைக்க நான் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறேன். நீதி மீதான நம்பிக்கையை இழக்கிறேன். எனக்கான உரிமை என்ன? நான் இப்போதும் கைகளை கட்டிக்கொண்டு நிற்கிறேன். தயவுசெய்து மரண தண்டனைக்கான உத்தரவை வழங்குங்கள். நானும் மனிதன்தான் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் வழக்கை நாளைக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், குற்றவாளி பவனுக்கு புதிய வழக்கறிஞர் ஒருவரையும் நியமனம் செய்ய அனுமதியளித்துள்ளது.

மேலும் படிக்க