• Download mobile app
21 Oct 2025, TuesdayEdition - 3541
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குறைப்பிரசவத்தை ஏற்படுத்தும் பிளாஸ்டிக். அதிர்ச்சி தகவல்.

May 21, 2016 தண்டோரா குழு

நாம் அன்றாடம் உண்ணும் உணவுப் பொருட்களுள் அதிகளவானவை கடைகளில் பிளாஸ்டிக் பாத்திரங்களில் வைத்தே விற்பனை செய்யப்படும்.

இவ்வாறு உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக் பாத்திரங்களில் வைக்கப்பட்டிருக்கும் போது குறிப்பிட்ட பாத்திரங்களில் காணப்படும் மேற்பூச்சானது உணவுப் பொருட்களுடன் கலந்து விடுகிறது.

இந்த உணவை உண்பதால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு குறைப்பிரசவம் ஏற்படும் என ஆய்வு ஒன்றிலிருந்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பிரிவில் பணியாற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராம்குமார் மேனன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்தத் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், பிளாஸ்டிக் பூச்சில் காணப்படும் Bis phenol A, அல்லது BPA எனும் பதார்த்தம் கர்ப்பிணித் தாய்மார்களின் இரத்தத்தில் கலப்பதனாலேயே இந்த குறைப்பிரசவம் ஏற்படுகிறது” என எச்சரித்துள்ளனர்.

மேலும் படிக்க