• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குறுந்தொழிலாளர்களுக்கு நிரந்தர அடையாள அட்டை – தொழிலாளர் நலத்துறை கமிஷனர் வழங்கல்

December 2, 2021 தண்டோரா குழு

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் (டாக்ட்) சங்கம் மற்றும் தொழிலாளர் நலத் துறையும் இணைந்து குறுந்தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள நிரந்தரத் தொழிலாளர் அடையாள அட்டைக்கான பதிவு செய்யும் முகாம்
துடியலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

முகாமுக்கு டாக்ட் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜேம்ஸ் தலைமை வகித்தார். கோவை தொழிலாளர் நலத் துறை கமிஷனர் வெங்கடேசன் அடையாள அட்டைகளை தொழிலாளர்களுக்கு வழங்கினார். இந்த முகாமில், இஎஸ்ஐ பதிவு இல்லாத, குறுந்தொழில் முனைவோர்கள் 300 பேருக்கு நிரந்தர அடையாள அட்டை பதிவு செய்து உடனுக்குடன் அளிக்கப்பட்டது.

தொழிலாளர் நலத் துறை ஆய்வாளர்கள், டாக்ட் சங்க நிர்வாகிகள் பிரதாப் சேகர், லீலாகிருஷ்ணன், துடியலூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் சுப்ரமணியன்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க