• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குருதி கொடை அளிப்பதில், தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது – தமிழக ஆளுநர்

October 25, 2019

குருதி கொடை அளிப்பதில், தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது கோவையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோவை ராம் நகர் பகுதியில், லயன்ஸ் கிளப் ஆப் கோயமுத்தூர் மற்றும் 324/B1 அரிமா மாவட்டத்தின் சார்பில் “அரிமா இரத்த வங்கியின் திறப்பு விழா” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அந்தநிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக, இரத்த வங்கியினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, அதன் கல்வெட்டுகளையும் திறந்து வைத்தார்.கோவை அரிமா மாவட்ட ஆளுநர் ஆர். கர்ணபூபதி யின் கனவு திட்டமான, இரத்த வங்கியின் திறப்பு விழா மற்றும் இரத்த வங்கி உருவாக பாடுபட்ட கொடையாளர் களுக்குப் பாராட்டி சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி, துனை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கோவை மாவட்ட ஆட்சியர் இ.ராசாமணி, கோவை மாவட்ட காவல் ஆனையர், மற்றும் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த இரத்த வங்கியின் சார்பாக மிக குறைந்த கட்டணத்தில், மேலும் 50விழுக்காடு சலுகை விலையில் நோயாளிகளுக்கு உடனடியாக இரத்தம் கிடைக்கும் வகையில் இந்த இரத்த வங்கி செயல்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்,

மருத்துவ துறையில் அதீநவின இயந்திரங்கள் வந்தாலும் இயற்கை நமக்கு அளித்த கொடையான குருதிக்கு நிகராக எதையும் உருவாக்க முடியவில்லை என்றும், குருதி தேவைப்படுகின்ற நிலையில் உடனடியாக நோயாளிக்கு கிடைத்தால் பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்றும் அந்த வகையில் லயன்ஸ் கிளப் சார்பில் இரத்த தானம் அளித்து பல உயிர்களை காப்பாற்றியவர்களுக்கான நற்சான்றிதழ் களை வழங்குவதில் பெருமை அடைவதாகவும். தெரிவித்தார்.

பின்னர் இது குறித்து 324/B1 அரிமா மாவட்டத்தின் ஆளுநர் கர்ணபூபதி கூறுகையில்,

குருதி கொடை அளிக்க மாணவர்கள் முன் வர வேண்டும் என்றும், கல்லுரி மாணவர்களுக்கு பல விழிப்புணர்வு மூலம் இந்த இரத்ததானம் பற்றிய மூட நம்பிக்கைகளை லயன்ஸ் கிளப் சார்பில் நடத்தப்பட்டு வருகிறதாகவும் பல மாணவர்கள் ரத்த தானம் அளிக்க முன் வந்துள்ளனர் என்றும், இந்த இரத்த வங்கி மூலமாக அரியவகையான இரத்தத்தினை கூட நோயாளிகளின் தேவை அறிந்து அவர்களுக்கு அளிக்க இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் திறந்து வைத்த இந்த இரத்த வங்கிக்கு “லயன்ஸ் டிஸ்ட்ரிக் 324/B1ஆர்.செல்வராஜன் ரத்த வங்கி” என பெயர் வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் லயன்ஸ் கிளப் சுபா சுப்ரமணியன், மற்றும் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க