• Download mobile app
19 Mar 2024, TuesdayEdition - 2960
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குரங்குகளுக்கு கருணையோடு உணவு வழங்கி வரும் செம்மேடு கிராம மக்கள்

April 7, 2020 தண்டோரா குழு

ஊரடங்கு உத்தரவால் பக்தர்கள் வரவின்றி உள்ள பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலில் உணவின்றி தவித்து வரும் குரங்குகளுக்கு கருணையோடு செம்மேடு கிராம மக்கள் உணவு வழங்கி வருக்கின்றனர்.

தென்கயிலாயம் என அழைக்கப்படும் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயில் மலையடிவாரத்தில் ஏராளமான குரங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன.கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவைகளுக்கு வழக்கமாக உணவு வழங்குவர். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பக்தர்கள் வருகை இல்லை. இதனால் போதிய உணவு இன்றி குரங்குகள் தவித்து வத்தன.இந்நிலையில் கோவிலுக்கு அருகில் வசித்து வரும் இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட செம்மேடு கிராம மக்கள் ஒன்று கூடி தினமும் ஊர் பகுதியில் வைத்து உணவு சமைத்து பின்னர் கோவில் வளாகத்திற்கு சென்று உணவில்லாமல் தவித்து வரும் குரங்குகளுக்கு கருணையோடு உணவு வழங்கி வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை உணவை எடுத்து சென்று பாக்கு மட்டையில் வைக்கும் உணவை குரங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து உணவருந்தி செல்கின்றன.

உணவில்லாமல் தவித்து வரும் ஏழைகளுக்கு இந்த சமயத்தில் உணவளித்து வரும் மனித நேயர்கள் ஒரு புறம் இருக்க உணவில்லாமல் தவிக்கும் வாயில்லா ஜீவன்களான இந்த குரங்குகளுக்கு கருணையோடு உணவு வழங்கி வரும் செம்மேடு கிராம மக்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க