• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குனியமுத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட இந்து அமைப்பினர்

July 27, 2020 தண்டோரா குழு

கோவை குனியமுத்தூர் பகுதியில் சாலையில் வேல் சின்னம் வரைந்த 5 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, இந்து அமைப்பினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவையில் பல்வேறு இடங்களில் சாலையில் வேல் சின்னம் வரைந்தவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கவுண்டம்பாளையம் பகுதியில் வேல் சின்னம் வரைந்த சதீஷ், சங்கர்பாண்டி, சீனிவாசன் மற்றும் தடாகம் பகுதியில் வரைந்த இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த கார்த்திக், பாண்டி, மனோகரன், கார்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

இதேபோல கெம்பட்டி காலணி பகுதியில் வரைந்த பாஜகவை சேர்ந்த சேகர், இந்து முன்னணியை சேர்ந்த கண்ணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல குனியமுத்தூர் பகுதியில் சாலையில் வேல் சின்னம் வரைந்த குருபரன், சந்தோஷ், அருண்குமார்,
சிவகணேஷ், அக்‌ஷய்வர்மா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பாஜக, இந்து முன்னணி, விஹெச்பி உள்ளிட்ட இந்து அமைப்பினர் குனியமுத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி 100 க்கும் மேற்பட்டோர் பஜனைப்பாடல்களை பாடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அப்போது திடீரென விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில இணைச் செயலாளர் அமர்நாத் சிவலிங்கம் என்பவர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி செய்தார். இதனை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல் துறையினர் அமர்நாத் சிவலிங்கத்தை காவல் நிலையத்திற்குள் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க